● மகேஸ், கோவை.

2019 ஜனவரியில் கேது தசையில் சனி புக்தி ஆரம்பம். அதனால் பாதிப்பு ஏற்படுமா? கோவையில் சுகேஷ் வசம் செப்டம்பரில் சனி சாந்தி ஹோமம் செய்தேன்.

Advertisment

முன்னதாகவே ஹோமம் செய்துவிட்டதால் தடுப்பு ஊசி போட்டுக்கொள்வதுபோல பாதிப்பு ஏற்படாது. 77 மிளகை சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி, காலபைரவர் சந்நிதியில் சனி புக்தி முடியும்வரை சனிக்கிழமைதோறும் நெய்யில் மிளகுப்பொட்டலத்தை நனைத்து தீபமேற்றவும். இது தற்காப்பு.

● விஜய் ஸ்ரீதர், சென்னை.

நான் எப்போது சொந்த மாக கார் வாங்கித் தொழில் செய்யலாம்?

தனுசு லக்னம், சிம்ம ராசி, பூர நட்சத்திரம். 7-3-2019-ல் ராகு தசை முடிந்ததும் குரு தசையில் உங்கள் திட்டம் செயல்படும்.

● எம். மனோன்மணி, ஆர். புதுப்பாளையம்.

என் மகனுக்கு 31 வயதாகிறது. எப்போது திருமணம் நடக்கும்?

ஜாதகத்தில் தோஷ மிருப்பதால் திருமணம் தாமதமாகும். முன்னதாக வெளிநாட்டு வேலை யோகம் வந்தால் யோசிக்காமல் அனுப்பிவைக்கலாம். 2020-ல் சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு திருமண முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

Advertisment

jothidamanswer

● ஜாதகர் தாயார், சிதம்பரம்.

என் மகன் தினேஷ் பாபு மிகவும் கஷ்டப் பட்டு கல்வி கற்று தனியார் துறையில் புனேவில் நல்ல பணியில் இருக்கிறார். அவருக்கு வெளி நாட்டு வேலை அமையுமா? அல்லது இருப் பிடத்திலேயே பதவி உயர்வு கிடைக்குமா? சொந்த வீடு அமையுமா?

ரிஷப லக்னம். 7-ல் சனி. குரு 12-ல் மறைவு. சிம்மச் செவ்வாய் விருச்சிகச் சனி யைப் பார்ப்பது தோஷம். திருமணத்தில் குழப்பம், பிரச்சினை உண்டு. 2019 மார்ச்முதல் வெளிநாட்டு வேலை அமையும். 2021-ல் சொந்த வீடு அமையும்.

● ஜெயகொடி, கோவை.

மகன் பி.ஈ., முடித்து ஒன்றரை வருடம் ஆகிறது. வேலை எப்போது கிடைக்கும்? எல்லாரிடமும் கோபப்படுகிறான்.

2020 டிசம்பர் வரை குரு தசை, ராகு புக்தி. இது ஒரு காரணம். தன்னோடு படித்தவர்கள், சேர்ந்தவர்கள் எல்லாம் வேலைக்குப்போய் சம்பாதிக் கிறார்கள். தனக்கு வேலையும் இல்லை- வருமானமும் இல்லை என்பது இன்னொரு காரணம். இதுவே அவரின் கோபத்துக்குக் காரணம். ஞாயிறு தோறும் (18 வாரம்) 23 மெழுகுவர்த்தியை சர்ச்சில் ஏற்றி வழிபடவும். உங்கள் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். மகனுக்கும் நல்ல வேலை கிடைக்கும். அன்பாக நடப்பார்.

● கோ. காளியப்பன், சென்னை.

எனது பேரன் திவாகரன் எலக்ட்ரிக்கல் டிப்ளமோ படிக்கிறான். எதிர்காலம் எப்படி இருக்கும்? ந. உஒரஆஃஆதஆச என்று கையெழுத்துப் போடுகிறான்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள பெயர் 26 வருகிறது; சரியல்ல.

இதை

S. D H I W A G A R A N

3 4 5 1 6 1 3 1 2 1 5

அல்லது

S. D H I V A G A R A N

3 4 5 1 6 1 3 1 2 1 5

என்று எழுதலாம். 32 வரும். இதைவிட சிறப்பு-

S. D H I V A G A R A N

3 4 5 1 6 1 3 1 2 1 5=37.

கடக ராசி, கடக லக்னம். 22 வயது வரை கேது தசை; பிறகு சுக்கிர தசை ராஜயோக தசை. டிப்ளமோ முடித்து டிகிரியும் படிக்கலாம். வெளிநாட்டு வேலையும் அமையும். சரவணன் ஜாதகப்படி உங்களுக்கு 80 வயது. சென்னையில் பம்மல்- பொழிச்சலூரிலுள்ள அகத்தீஸ்வரர் கோவில் சென்று (வடதிருநள்ளாறு) 19 சனிக்கிழமை வழிபடவும். அதற்கு மேலும் போகலாம். திங்கட்கிழமைதோறும் கிஷ்கிந்தா அருகில் சோமங்கலம் ஸ்ரீசோமநாத ஈஸ்வரருக்கு பத்து வாரம் பாலாபிஷேகம் செய்யவும். சதாபிஷேகம் பார்க்கலாம்.

● து. செல்வராஜு, விழுப்புரம்.

எனது மகனுக்கும் மருமகளுக்கும் 1-5-2015-ல் திருமணம் நடந்தது. இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை. எப்போது கிடைக்கும்?

திருமணத் தேதி கூட்டு எண் 5 என்பது தோஷம். இரண்டாவது, மகன் விருச்சிக ராசி; மருமகள் மேஷ ராசி. இதுவும் ராசி சஷ்டாஷ்டக தோஷம். என்றாலும் மகன் விருச்சிக ராசி, மருமகள் விருச்சிக லக்னம் என்பதால் பிரிவு- பிளவுக்கு இடமில்லை. திருமணம் நடந்து 4-ஆவது வருடம் ஆரம்பம். காரைக்குடியில் சுந்தரம் குருக்களை செல்: 99942 74067-ல் தொடர்பு கொண்டு சந்தான கோபால கிருஷ்ண ஹோமம், சந்தான பரமேஸ்வர ஹோமம், புத்திரப்ராப்தி கணபதி ஹோமம் செய்து இருவருக்கும் கலச அபிஷேகம் செய்யுங்கள். இத்துடன் மொத்தம் 19 அல்லது 21 ஹோமம்- ஆயுள் விருத்தி, ஆரோக்கிய விருத்தி, வாழ்க்கை முன்னேற்றம், குடும்ப ஒற்றுமை, பொருளா தார சேமிப்பு, சொந்த வீடு வாசல் யோகம், கடன் நிவர்த்தி போன்றவற்றுக்கும் செய்யப் படும். 5-ஆவது வருடம் புத்திர பாக்கியம் கிடைக்கும். அதற்குப் பிறகு (ஹோமம் முடிந்தபிறகு) ஒருமுறை கும்பகோணம்- குடவாசல் வழி சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயருக்கும் ஒரு அபிஷேகம் செய்யவும். தொடர்புக்கு: டிரஸ்டி நாகசுப் பிரமணியம், செல்: 94872 92481.

● கார்த்தி, தஞ்சாவூர்.

தங்களின் ஆசியும் வாழ்த்தும் கிடைத்தவர்கள் கொடுத்து வைத் தவர்கள்; பாக்கியசாலிகள். என் நண் பனின் வழிகாட்டுதலின்படி, கடந்த நான்கைந்து வருடமாகத் தொடர்ந்து "பாலஜோதிடம்' படித்து வருகிறேன். நான் எம்.பி.ஏ., முடித்து தனியார் பள்ளியில் வேலை பார்க்கிறேன். எனக்கு அரசு வேலை நிரந்தரமாக அமை யுமா? திருமணம் எப்போது நடக்கும்? வீடு கட்ட வாய்ப்புண்டா? அப்பா இல்லை. அம்மா மட்டும்தான். எதிர் காலம், முன்னேற்றம் எப்படி?

திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, கன்னியா லக்னம். 33 வயது முடிந்து ஜூன் மாதம் 34 ஆரம்பம். லக்னத்துக்கு 2-ல் சனி, கேது சம்பந்தம். 8-ல் சுக்கிரன், ராகு மறைவு. நாக தோஷமும் களஸ்திர தோஷமும் உண்டு. அதனால் திருமணம் 36 முதல் 40 வயதுக்குள் நடக்கலாம். 7-க்குடைய குருவும் மகரத்தில் நீசம். அவரை மிதுனச்செவ்வாய் பார்ப்பதால் காதல் திருமணம் அல்லது கலப்புத் திருமண வாய்ப்புக்கும் இடமுண்டு. 18-12-2019 வரை சனி தசை, சுக்கிர புக்தி. அதன்பிறகு சூரிய புக்தியில் அரசு வேலைக்கு யோகமுண்டு. என்றாலும் முன்னதாக காரைக்குடியில் சுந்தரம் குருக்களைத் தொடர்பு கொண்டு காமோகர்ஷண ஹோமமும், கந்தர்வ ராஜ ஹோமமும், சூலினிதுர்க்கா ஹோமமும், விஜயலட்சுமி ஹோமமும், இத்துடன் மொத்தம் 16 முதல் 19 வகையான ஹோமம் செய்து கலச அபிஷேகம் செய்துகொண்டால் அரசு வேலையும் அமையும். அடுத்து நல்ல இடத்தில் வேலை பார்க்கும் மனைவியும் அமைவார். அம்மா வுக்கும் ஆயுள், ஆரோக்கிய விருத்திக்கு ஹோமத் தில் சங்கல்பம் செய்து கலச அபிஷேகம் செய்து கொள்ளலாம். தொடர்புக்கு: செல்: 99942 14067.

● நெய்வேலி வாசகர்.

நான் காவல்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவன். உங்கள் ஆன்மிகம் மற்றும் ஜோதிடத் தொண்டு அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. எங்கள் ஒரே மகளின் திருமணம் எப்போது நடக்கும்? தற்போது பட்டப் படிப்பு 3-ஆம் ஆண்டு படிக் கிறாள். அரசுப்பணி அமையுமா?

மகள் மகாலட்சுமி புனர்பூச நட்சத் திரம், கடக ராசி, தனுசு லக்னம். லக்னத் துக்கு 2-ல் கேது, 8-ல் சந்திரன். 5- புத்திர ஸ்தானம்- பெண்களுக்கு கர்ப்பஸ்தானம். அங்கு சனி நீசம். புத்திரகாரகன் குருவும் 6-ல் மறைவு. எனவே மாங்கல்ய தோஷம், புத்திர தோஷமும் இருப்பதால் திருமணத்தடையும் உண்டு; தாமதமும் உண்டு. 28 முதல் 30-க்குள் திருமணம் நடக்க வாய்ப்புண்டு. அதுவரை பொறுமையாகக் காத்திருக்கவும். தற்போது 19 வயதுதான் நடக்கிறது. பட்டப்படிப்பு முடிந்து உயர்கல்வி மேற்படிப்பும் முடிக்கட்டும். வேலைக்கும் போகட்டும். 25 வயதில் பார்வதி சுயம்வரகலா ஹோமம் செய்து அவருக்கு கலச அபிஷேகம் செய்தால் திருமணத்தடையும் தாமதமும் விலகி நல்ல வாழ்க்கையும் அமையும். அப்படி ஹோமம் செய்யும்போது அரசு வேலைக்கும் சங்கல்பம் செய்துகொள்ளவும். அரசு வேலைக்கும் இடமுண்டாகும்.